கொரட்டிச் சண்முகர்பேரில் பதிகம் contents.html about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. கொரட்டிச் சண்முகர்பேரில் பதிகம். இவை பிருங்கிமாநகரம் வேம்புலிமுதலியாரவர்கள்குமாரர் நமசிவாய முதலியாரவர்களது சென்னை சூளை நிரஞ்சனவிலாச அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது 1923
Contents | Home

காப்பு வெண்பா கொரட்டிப்பதிவாழுங் குமரனறுமுகன்மேல் திரட்டிப்பாமாலை சூட்ட — கொரட்டிதனில் ஆலயத்தில்[ன்]கண்ணுள்ள வைங்கரத்தான்பாதமலர் சாலவணிகொள்வேன் றலை. கராணங்கள்ஞானங்கள் நிலைகலங்காமலுன் கழலிணைநினைக்கவைப்பாய், காயத்தின்வலுமையது குன்றாமலுன் னை யேகைகுவித்திடவுமருள்வாய், சரவணபவாவென்னு நாமமென்னாவினிற் றாழாகிருக்கநினைவாய், தாமதமிராச மெனு மிருகுணங்களானவை சாராதிருக்கவைப்பாய், இருவினைகளொன்றேனுநலியாமலென்மனதை யேகநாட்டத்தில்வைப்பாய், ஏழையேன்வேண்டுவதை இல்லை யென்னாமலே ஈந்துரக்ஷித்தருளுவாய், மரணவேதனையெ னுமாமாயையணுகாமல் வந்தென்னை யஞ்சலென்பாய், வானவர்சகாயனே ஞானகுருதேசிகா மாசில்சண்முகநாதனே. — ௧ பன்னாகபூஷணன் பெற்றமாகவே திருப்பாற்கடலின் மீதிலுரைவோன், பாவித்தமருகனே வேல்வைத்தகையனே பார்மீதினாயினேன்றான், உன்னையே தெய்வமென நம்பியேயெப்போது முன்கழற்கன்புபுரிவேன், ஓமெனுமெழுத்தினோடுன்னாரெழுத்தினையு மோயாமலோதநினைவேன், அன்னைநீயப்பநீ யறிவாயெவைக்குமே யாதார மானபொருளே, ஆரேனுநினதடிமையாவரேயெப்போது மவர்களைக்கார்க்கநினைவாய், வலனெஞ்சனேனையும்வாழ்வித்[ப்]ததுன்கடமை வந்தென்னையஞ்சலென்பாய், வானவர்சகாயனே ஞானகுருதேசிகா மாசில்சண்முகநாதனே. — ௨ எத்தனைபடிக்கினு முலாவுகினுநாளெலா முத்தேகநிலையற்றதென், றெண்ணிலும் பயனில்லை என்செய்குவேனான் என்மனமொடுங்கவிலையே, சித்தெனுமிவ்வுடற்சட மெனவுமோதினுந் தேகத்தி லபிமானமே, சேர்ந்தென்னைமயக்குதுசேராதவண்ணநீ தீர்த்தென்னையாளவேண்டும், பித்தனைப்போலவே பிணிவந்தபோதுநான் பேதித்தன்மிகவுநன்றோ, பேசாதவானந்த சுகவாரிதன்னிலே பேராதிருக்கவருள்வாய், மத்தமுடன்மதியமுங் கொன்றையுமணிந்தசிவன் வாஞ்சையோடழி[ளி]த்தபுதல்வா, வானவர்சகாயனே ஞானகுருதேசிகா மாசில்சண்முகநாதனே. — ௩ மடமையேதருகின்ற விடையசுகமதனிலே வாடியே கெட்டார்கணானும், வாடாதவண்ணமே யருளினாலல்லவோ மனதினையடக்கலாகும், கடையனேன் விடையமே கருதிவாணாளைகழிக்காமலருள்புரிகுவாய், காமாதிதன்னிலே வெகுவாயிருக்காமற் கைவிடாதாண்டுகொள்வாய், படைகொண்டசூரர்தங் குடல்கிண்டுவேலினைப் பற்றியீடு மதிசூரனே, பாவையர்களிருவர்பால் மகிழ்கின்றசீலனே பற்றினேனுன்னையென்றும், வடவாலிநிழறனி நால்வருக்குபதேசம் வைத்தவன் பெற்றபுதல்வா, வானவர்சகாயனே ஞானகுருதேசிகா மாசில்சண்முகநாதனே. — ௪ சென்னிலக்கொரட்டிதனில் வருகின்றபேயர்கள் வினைதீர்த்து நீவிடைகொடுப்பாய், தீராதநோய்களுக்கு தருமருந்ததனை தந்துநீவிடைகொடுப்பாய், மந்திரமெனும்பெரிய வாரெழுத்துண்மைநெறி மாசறக்கற்கவறியேன், மானிடப்பிறவிதனில் வந்தனானெப்போதும்வணங்கின துந்தானுமுண்டோ, சந்ததமுமுன்னன்பர் மலரிட்டுநின்னையே தாள்வரப்பணிகின்றனர், தமியனே னவ்வண்ணஞ் சார்ந்திருந்தாலிந்த தட்டுதலும்வருவதுண்டோ, வந்தவினைதீரநீ யெண்ணினாலக்கரும மாறாதிருப்ப துண்டோ, வானவர்சகாயனே ஞானகுருதேசிகா மாசில்சண்முகநாதனே. — ௫ மின்னணையபொய்யுடலை மெய்யென்றுநம்பியே மமதையிலாழ்ந்திருந்தேன், மேலாந்தவத்தொழில்கள்பூண வறியாமலேயின்னமலைகின் றனேனான், என்னுயிர்க்குயிரா யிருக்குநின்றன்மைகளை எப்படியறிந்துகொள்வேன், இகமொடுபரத்தினிறு நீயன்றிவேறுமொரு ஈசனுமிருப்பதுண்டோ, பன்னுகவிவாணனாய்ப் பாடவறியாலெனைப் பாடும்படிக்கருளுவாய், பார்மீதிலேநல்ல குருமுனிக்கருளினாய்ப் பார்த்தென்னை ரட்சைபுரிவாய், வன்னெஞ்சினொடுசூரன் மாலாய்மறைந்தாலு வனியிற்குத்திவீழ்த்தாய், வானவர்சகாயனே ஞானகுருதேசிகா மாசில்சண்முகநாதனே. — ௬ தானெனுமாணவம் விடாதநற்கீரனைத் தாழ்வானசிறையில்வைத்தாய், தானவர்கள்வானவரை வைத்தசிறை மீட்டுமவர் தாழ்வினையகற்றிவிட்டாய், நானந்தயமபடர்காளகனேராம் னாடோறுமாண்டுகொள்வாய், நானெனுமகந்தையது வாராமலேயுனது நாட்டத்திலேயமைப்பாய், தேனுறுகொன்றையுந் தும்பையுமணிந்தபர சிவனுக்குகந்தபுதல்வா, தெவிட்டாதவானந்தவார தனிலென்னையே தேக்கிடவு மருள்செய்குவாய், மான்விழினாரிருவர் பக்கத்திருந்துமொருவா தனையுமின்றிநின்றாய், வானவர்சகாயனே ஞானகுருதேசிகா மாசில்சண்முகநாதனே. — ௭ ஐம்பொறியொடைம்புல னடக்கியுன தருள்நாடிலா னந்தநிட்டைபெறலாம், ஐம்புலனடக்குதற் குன்னருளை யன்றியோ ராதரவுமில்லைகண்டாய், பைம்பொன் மணிமாலைபுனை பாவைய[ர்] கள்வலையிலே பாடாதிருக்கவேண்டும், பாவியுமாயென்னையும்நீ பாலிப்பையோநினது பழவடியரோடுகூடி, அம்புயாசனனுன்னை யறியாதுயேழை னானாதலாற் சிறையிலிட்டாய், ஆதாரமாயுன்னை யண்டிநோரைக்கார்க்க மக்கிராரமாயி நின்றாய், வம்புமலர்மாலையுங் கங்கையுமணிந்தசிவன் மாண்பாயளித்த புதல்வா, வானவர்சகாயனே ஞானகுருதேசிகா மாசில்சண்முகநாதனே. — ௮ கன்னலின்சுவையெனக்கற்கண்டுபாகெனக் கண்டுனைப்பருகிலிந்த, காயத்தில்வந்துரவு கன்மாதவ நீங்குவென் காட்டிக்கொடுத்தாயிலை, யென்னையொப்பாள்வர்கள் யாரேனுமொருவரை யிப்புவியில்யாவர்காண்பர், ஏழையே நின்னடிமை யாகினேன்கைவிடி னெங்கே பிழைப்பதெந்தோ, பொன்னையு மண்ணையும் பொய்மையாய்ப் பெண்ணையும் போகமாய்க்கண்டிராது, பூராயமாய்நின்னையண்டினே னவையினிப் போதுமனம்வாய்க்கவிலையோ, வன்னமயில்மீதிலே வருமுனதுகாட்சிபெற வைப்பையோ வறிகிலேனே, வானவர்சகாயனே ஞானகுருதேசிகா மாசில்சண்முகநாதனே. — ௯ இப்பிறவிநற்பிறவி யெங்ஙனெனிலுன்னை யென்றிதயமாஞ்சிறையிலிட்டேன், யாவருனைவிடுவிப்பா ரையனே யென்னைவிட்டெவ்வாறு தப்பலாகும், அப்பனேயையனே யென்றுனைப்பணியவும் வரமளித்தென்னையாள்வாய், ஆரெழுத்தோதியே ஐம்புலனடக்கும் வழியார்வமொடு காட்டவேண்டும், ஒப்புனக்கொருதெய்வ முண்டென நினைந்திடிலோயா தபிறவிவருமே, ஓமெனுமெழுத்தினில் உண்மைதனை நாயினேனுள்ளத் துணரவைப்பாய், மைபுயற்கூந்தலார் வள்ளிதெய்வானையொடு மருவியேவாழுமுருகா, வானவர்சகாயனே ஞானகுருதேசிகா மாசில்சண்முகநாதனே. — ௰ விருத்தம். பூவலயமாகவே போகவறியேனுனைப் பூவெடுத்துத் துதிக்கவறியேன் காவென்றுவாழ்த்திடவு நாவிலறியேனிரு கண்கண்மழை சோரவறியேன் பாவலர்கள்போலவே பாடவறியேனெனைப் பார்த்துநீ யாளவேண்டும் தேவலோகத்தவர் பணியுநற்பாதனே திருகொரட்டிப் பணிவாசனே. துதி விருத்தம். சுரந்தநீர்வயல்களாலே சூழ்ந்ததோர் கொரட்டி மேவும், வரந்தரு காளத்தீசன் வளமையுள் ஞானம்பாளும், இரந்தவேரம்பனோடு வுடும்பனாங் கடம்பன்கந்தன், பொருந்தனமடைவார் தன்னைப் பெருமையில் வணங்குவோனே. கொரட்டிச் சண்முகப்பதிகம் முற்றிற்று.
Contents | Home